எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க்,பிப். 11- சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது.

இந்த நிலையில் ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த அய்.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த மாதம் 28ஆம் தேதி துருக்கி சென்றார். அங்கு அவர் கடந்த 3-ஆம் தேதி வரை பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தினார். அதனை தொடர்ந்து தனது விசாரணை குறித்த முதல் அறிக்கையை நேற்று முன் தினம் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடை பெற்று வரும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை கவலை அளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சவுதி அரேபியாவிற்கு அதி காரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டுள்ளேன். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் அய்.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்”.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெனிசுலா எல்லையை மூடிய அதிபர்

கராக்கஸ், பிப். 11- வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கி டையே எதிர்க்கட்சி தலைவர் சுவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் அந்த நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். இதற் கிடையில் சுவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவி பொருட்களை வழங்க முன்வந்துள்ளன.

ஆனால் வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கும் அதிபர் நிகோலஸ் மதுரோ வெனிசுலா எல்லை பகுதிகளை மூடிவிட்டார். இதனால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உதவி பொருட்களை ஏற்றி வந்த லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

உதவி பொருட்கள் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த வெனிசுலா மக்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner