எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், பிப். 11- பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம், அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கான இரண்டு திட்டங்களை இந்தியாவில் செயல் படுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் உள்ள 5 கோடி பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி, அவர்களை பொருளாதார ரீதி யில் முன்னேற்றமடையச் செய்வதற்கான புதிய திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு செயல்படுத்தவிருக்கிறது.

அதிபர் டிரம்ப்பின் மகளும், அவரு டைய மூத்த ஆலோசகருமான இவாங்கா டிரம்ப்பின் தலைமையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக செயல்படுத்தப்படவி ருக்கும் இந்தத் திட்டத்துக்கு உலக பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொரு ளாதார வளர்ச்சி (டபிள்யூ-ஜிடிபி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கான ஒரு திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த விருக்கிறது.

தனியார் குளிர்பான நிறுவனத்துடன் இணைந்து, அமெரிக்க சர்வதேச மேம் பாட்டு அமைப்பு இந்தத் திட்டத்தை செயல்படுத்தும். இந்தத் திட்டத்தின்படி, பெண்களுக்கு வேளாண் பொருள்களுக் கான விநியோக வசதிகளை வழங்கு வதன் மூலம் அவர்களது பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகை செய்யப் படும்.

மேலும், பெண் தொழில் முனை வோருக்கு  இந்தியாவின் இண்டஸ் இண்ட் சிறுதொழில் கடன் வங்கியின் மூலம் கடன் வழங்கப்படும். இதற்காக அமெரிக்காவின் வெளிநாட்டு தனியார் முதலீட்டு அமைப்பின் (ஓபிஅய்சி) மூலம் 10 கோடி டாலர் (சுமார் ரூ.712 கோடி) அந்த வங்கியில் முதலீடு செய் யும்.

இந்தியாவில் செயல்படுத்தப்பட வுள்ள மற்றோர் திட்டத்தில், இந்திய பெண் தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகளை ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அவர்களது திறன் மேம்படுத்தப்படும் என்று அதி பர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டபிள்யூ-ஜிடிபி திட் டத்தின் கீழ் 5 கோடி பெண்களின் வாழ் க்கைத் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட் டிருந்தாலும், அதைவிட அதிகம் பேர் இந்தத் திட்டத்தால் பலனடையக் கூடும் என்று அதிபர் டிரம்ப்  நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner