எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஸ்கொக், பிப். 11-  தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் யிங்லக் சின வத்ராவின் ஆட்சியை ராணு வப் புரட்சியின் மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு கவிழ்த்த அப் போதைய ராணுவ தலைமை தளபதி பிரயுத் சான்-ஓ-சா, தற் போது அந்த நாட்டின் பிரதம ராக பதவி வகித்து வருகிறார். அடுத்த மாதம் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர் தலில் ஃபலங் பிராசரத் கட்சி சார்பிலான பிரதமர் பதவி வேட்பாளராக அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக் கும் நம்பிக்கையுடன் அவர் உள்ளார்.

இந்தச் சூழலில், மக்களி டையே செல்வாக்கு மிக்க அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவ ரசி உபோல்ரத்தனா இந்தத் தேர்தலில் தாய் ரக்சா சார்ட் கட்சியின் பிரதமர் பதவி வேட் பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து, தேர்தலில் தற்போதைய பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா மீண்டும் வெற்றி பெறுவது கேள்விக்குறியானது.

இந்த நிலையில், இளவரசி உபோல்ரத்தனா தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசர் மகா வஜிரலங்கார்ன் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவரை தேர்தலில் நிறுத்தும் திட்டத்தை தாய் ரக்சா சார்ட் கட்சி தற் போது கைவிட்டுள்ளது.

தேர்தலில் இளவரசி போட் டியிட்டிருந்தால், தாய்லாந்து வரலாற்றில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பொதுத் தேர்த லில் போட்டியிட்டது அதுவே முதல் முறையாக இருந்திருக் கும்.

தாய்லாந்து அரச குடும்பம் அரசியலுக்கு அப்பாற்பட்ட தாகக் கருதப்படுகிறது.

அரசியல் பதற்றம் அதிகரிக் கும்போது மட்டும் எப்போதா வது அரச குடும்பத்தினர் அரசி யல் விவகாரங்களில் தலையி டுவர்.

இந்த நிலையில், முதல் முறையாக ஓர் அரசியல் கட்சியின் சார்பில் அரசர் மகா வஜிரரலாங்கார்னின் மூத்த சகோதரியும், இளவரசியுமான உபோல்ரத்தனா போட்டியிட விருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner