எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தைபே, ஏப். 12- தைவானில் கீ(29) எனும் பெண் கடந்த வாரம் தனது உறவினரின் கல்லறைக்கு சுத்தம் செய்வதற்காக சென்று உள்ளார். பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது கண்களில் அரிப்பு மற்றும் கடு மையான வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கைகளை கொண்டு வழக்கம்போல கண் களை கசக்கியுள்ளார். தொடர்ந்து வலி ஏற்படவே கண்களை கழுவியுள்ளார். சரிவரவில்லை. மறுநாள்  அருகிலுள்ள மருத் துவமனை மருத்துவரை அணு கினார். அப்போது தான் அவ ருக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

இது குறித்து மருத்துவர் கூறுகையில், ‘கண்களில் ஏதோ பூச்சியின் கால்கள் இருப்பது போல் இருந்தது. நுண்ணோக்கி மூலம் எடுத்துவிடலாம் என பார்த்தேன். அப்போது 4 தேனீக் கள் உள்ளே இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் மெதுவாக அவரது கரு விழிகளுக்கு எவ்வித பாதிப்பு மின்றி தேனீக்களை எடுத்தேன். அவை உயிருடன் இருந்தன. உலகிலேயே இது தான் முதல் நிகழ்வு என நினைக்கிறேன். இவை வியர்வை தேனீக்கள் ஆகும்’ என கூறினார்.

இதையடுத்து 5 நாட்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 80 சதவிகிதம் பார்வை சரி செய் யப்பட்டுள்ளது. பார்வையில் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner