எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் ஓவியர் சி.குழந்தைவேல், சி.பழனிவேல், சி.செல்வராசு ஆகியோரின் தாயார் அழகம்மாள் சின்னு (வயது 75) அவர்கள் கடந்த 31.1.2017 அன்று இரவு 9 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவரது இறுதி நிகழ்வில், புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமையில், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு  மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

- - - - -

பொள்ளாச்சி நகர திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் க.நடராசன் அவர்கள் 3.2.2017 பிற்பகல் 1.30 மணிக்கு தனது 77ஆவது வயதில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்ச்சி 4.2.2017 மாலை 4 மணியளவில் பொள்ளாச்சி மின் மயானத்தில் நடை பெற்றது.

ஆசிரியர் க.நடராசன் அவர்கள் பரம்பிக்குளம் அரசு ஆரம்பப்பள்ளியில் நாற்பது ஆண்டுகள்; பணியாற்றியவர், தனது பணிக்காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தில் இருந்து சிறப்பாகப் பணியாற்றி வந்திருக்கிறார். அவர் சிறு வயது முதற்கொண்டே தந்தை பெரியார்பால் தீவிரப் பற்றுக் கொண்டவராக இருந்துள்ளார். அவரது சொந்த ஊர் ஆனைமலையாக இருந்ததால், தந்தை பெரியார் அவர்கள் ஆனைமலை நரசிம்மன் அவர்களது இல்லத் திற்கு வரும் போதெல்லாம், இவர் தந்தை பெரியாரை நேரில் சென்று பார்த்து மகிழ்ச்சியடைவாராம்.

இவரது வாழ்விணையர் திருமதி இந்திராணி அவர்கள் ஓய்வு பெற்ற ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆவார். இவருக்கு சிந்தியா பூரணி என்ற மகளும் கதிரவன் என்ற மகனும் உள்ளனர். தொடர்புக்கு: 97883 29880

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner