எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.இராதா அரங்கில் நீண்ட காலமாக ஒலி - ஒளி அமைத்து தரும் அமுதா சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் பி.ராஜேந்திரன் அவர்களின் தாயார் திருமதி ராஜேஸ்வரி அம்மாள் (வயது 92) அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக நேற்றிரவு (24.3.2017) 8 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தகவல் அறிந்த தமிழர் தலைவர் அவர்கள், அவரது இல்லத்திற்கு சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி அவர்தம் குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார்.

கழகத் தலைவருடன் பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், எம்.ரங்கநாதன் மற்றும் பணியாளர்கள் உடன் சென்றனர். மறைந்த திருமதி ராஜேஸ்வரி அம்மையாருக்கு பி.லோகநாதன், பி.சுந்தரமூர்த்தி, பி.ராஜேந்திரன் ஆகிய மூன்று மகன்களும், மஞ்சுளா, ஜெகதாம்பாள் என்ற இரு மகள்களும் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner