எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம் அம்மாப்பேட்டை, சட்ட எரிப்பு வீரர் பெரியார் பெருந்தொண்டர் பி.கொளந்தைசாமி (வயது 91) அவர்கள் 11.4.2017 அதிகாலை 4 மணியளவில மறைவுற்றார். இவருக்கு பொய்யா மொழி, சித்தார்த்தன், காமராஜ் ஆகிய மகன் களும், கலைவாணி, ரஷ்யா ஆகிய மகள்களும் உள்ளனர்.

கொளந்தைசாமி அவர்கள் 1956 நவம்பரில் நடைபெற்ற சட்ட எரிப்புப் போரில் கலந்து கொண்டதால் 9 மாதங்கள் சிறை தண்டனைப் பெற்றவர். கழகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் கலந்து கொண்டவர். கொளந்தைசாமி தந்தை பெரியாரிடத்தில் நேரடியாக தொடர்பு கொண்டவர்.

கொளந்தைசாமி அவர்களின் உடலுக்கு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் புள்ளையண்ணன், சேலம் மண்டலத் தலைவர் சி.சுப்பிரமணியம், செயலாளர் அ.ச.இளவழகன், சேலம் மாவட்டச் செயலாளர் கடவுள் இல்லை கே.சிவக்குமார், மேட்டூர் மா. தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்டத் தலைவர் கே.ஜவகர், இராவணபூபதி, ஓமலூர் சவுந்திரம், மகளிரணி கமலம் மாதேசுவரன்,  பொன்னம்மாப்பேட்டை தமிழ்செல்வம், அம்மாப் பேட்டை மொட்டையன், தனபால், திருநாவுக்கரசு, சந்திரா, சட்ட எரிப்பு வீரர் டி.என்.சின்னு, நடராசன் மற்றும் ஏராளமான தோழர் களும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner