எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம், தேக்கல்நாயன்பட்டி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.பிரபாகரன் அவர்களின் தந்தை, சுயமரியாதை இயக்க முன்னோடி ஆசிரியர் முனுசாமி (வயது 76) அவர்கள் உடல் நலக் குறைவால் 15.4.2017 அன்று பகல் 2 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவருடைய உடல் பண்ணைத் தோட்டத்தில் வைக்கப் பட்டிருந்தது. தகவல் அறிந்து மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி, மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில ப.க. செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர் சி.காமராஜ், மாவட்ட துணைத் தலைவர் பீம.தமிழ்பிரபாகரன், ஆசிரியரணி செயலாளர் சந்தப்பட்டி தீ.சிவாஜி, தலைமை கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், மகளிர் பாசறை தலைவர் மு.சாந்தி, மாவட்ட அமைப்பாளர் இ.மாதன், ரேசனலிஸ்ட் தலைவர் க.சின்னராஜ், மா.சுந்தரம், வினோபாஜி, பொதுக்குழு உறுப்பினர் அ.தமிழ்ச்செல்வன், சாமிநாதன், கடத்தூர் நகர தலைவர் சுப.மாரிமுத்து, நெடுமிடல் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner