எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், ஓய்வு பெற்ற ஆசிரியரும், பணி காலத்திலேயே இயக்க ஆர்வலராகவும், பகுத்தறிவுப் பணிகளைப் பரப்புவோராகவும் விளங்கி பணி ஓய்வுக்குப் பின் மாவட்டக் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று, தம் இணையர் சரசுவதி அவர்களுடனும் குடும்பமே இணைந்து கழகப் பணியாற்றிய அரும் பெரும் தோழர் இராமதி.இராசன் அவர்கள் தமது 74ஆம் அகவையில் மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறோம் (3.5.2017).

அவர் தனது நிலங்களில் ஒரு பகுதியை நமது அறக்கட்டளைக்கும் நன்கொடையாக தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இராமதி.இராசன் அவர்களின் மகன்களும், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பில் உள்ளனர்.

அவரது பிரிவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; இயக்கத்திற்கே முக்கிய இழப்பாகும். அவர் பிரிவால் வருந்தும்  குடும்பத்தாருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். - கி. வீரமணி

 

சென்னை            தலைவர்
4-5-2017         திராவிடர் கழகம்

திருமதி சரசுவதி அவர்களிடம் கழகத் தலைவர் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்.

கழகத்தின் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்குடி சாமி. திராவிடமணி அவர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்துவார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner