எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிதம்பரம் வட்டம் பூந்தோட்டம் வனத்துறை அதிகாரி (ஓய்வு) பெரியார் பெருந்தொண்டர் நா.வீரமணி (வயது 80) உடல் நிலை சரியில்லாமல் 7.5.2017 ஞாயிறு மாலை சென்னை மருத்துவ மனையில் மறைவுற்றார்.

அன்னாரின் உடல் சிதம்பரம் மாரி யப்பா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் வைக் கப்பட்டது. சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராக யிருந்த பொழுதே, திராவிடர் மாணவர் கழகத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர், புலவர் இமயவரம்பன் ஆகியோடு இணைந்து பணி யாற்றியவர்.

இறுதிகாலம் வரை கடவுள் மறுப்பாளராக வாழ்ந்து தமிழர் தலைவருடன் தொடர்பில் இருந்தவர்.

திராவிடர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், நகர அமைப்பாளர் இரா.செல்வ ரத்தினம், மாநில ப.க. துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் இரா.திருமாவளவன், மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் பூ.வே.அசோக்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner