எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செம்பியம், மே 10- வடசென்னை மாவட்டக் கழக மேனாள் செயலாளர் செம்பியம் சே.ஏழு மலை அவர்களது துணைவியார் ஏ.பவுனம்மாள் (வயது 76) 8.5.2017 அன்று அதிகாலை 3 மணி யளவில் இயற்கை எய்தினார்.

மறைந்த அம்மையார் அவர் கள் வடசென்னை மாவட்டக் கழகத் தோழர்களை நன்கு அறிந் தவர். இல்லத்திற்கு வருகை தரும் கழகத் தோழர்களை வர வேற்று அன்பு காட்டியவர் ஆவார். அவர்களுக்கு நான்கு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர்.

வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், துணைச் செயலாளர் கி.இராமலிங்கம, இளைஞரணித் துணைச் செய லாளர் சி.பாசுகர், எருக்கமா நகர் சொ.அன்பு, பாவேந்தர் பகுத்தறி வுப் பாசறை செயலாளர் ஓவியர் கிருபா, செம்பியம் கழகத் தலை வர் பா.கோபாலகிருட்டிணன், செயலாளர் டி.ஜி.அரசு, அமைப் பாளர் கு.செங்குட்டுவன் மற்றும் கழகத் தோழர்கள், கழக சார்பில் மாலை வைத்து இறுதி மரி யாதை செலுத்தினர்.

வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே. சேகர் பாபு, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ப.ரங்கநாதன், திமுக சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் இரா.கிரிராசன், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் தேவ.ஜவகர், கொளத்தூர் பகுதி (கிழக்கு திமுக செயலாளர் அய்.சி.எப்.முரளிதரன், மேற்கு பகுதி செய லாளர் ஏ.நாகராசன், இளைஞ ரணி அமைப்பாளர் மகேசு குமார், 68ஆவது வட்டத் திமுக செயலாளர்கள் ஏ.லாசர், அ.பொன் முடி மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

மாலை 4 மணிக்கு கழகக் கொடிகள் கட்டப்பட்ட வாகனத் தில் ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்ட அம்மையாரது உடல் எவ்வித மூடச் சடங்குகளுமின்றி திரு.வி.க.நகர் தாங்கல் இடுக்காட் டில் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner