எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டம் நத்தம் (கண்கொடுத்த வனிதம்) முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கலியாணசுந்தரம் (வயது 91) அவர்கள் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். ஊராட்சி மன்றத் தலைவராகவும் அப்பகுதியில் கழகத் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்தவருமான அவரின் மறைவு கழகத்திற்கு முக்கிய இழப்பாகும்.

அவரின் இயக்கப் பணிகளை நினைவுகூர்ந்து, வீரவணக்கம் செலுத்தி, அவர்தம் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், கழகத்தின் சார்பில் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சென்னை                                                                                                       - கி.வீரமணி
10.5.2017                                                                                            தலைவர், திராவிடர் கழகம்

மறைவு

கொரடாச்சேரி ஒன்றியத்தின் கழகத் தலைவராகவும், நத்தம் ஊரைச்சார்ந்த கண்கொடுத்த வனிதம் ஊராட்சி மன்றத் தலைவராக மூன்று முறை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டவரும் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆகியோரின் அன்பைப் பெற்றவருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கல்யாணசுந்தரம் (வயது 91) 9.5.2017 அன்று காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம்.

இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் - சந்திரசேகரன், மேகநாதன், இந்திரஜித்து, இளங்கோவன் மகள்கள் மகேஸ்வரி, நாகமணி ஆகியோர். மறைவு தகவல் அறிந்ததும் மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், மண்டல தலைவர் இரா.கோபால், மண்டல செயலாளர் க.முனியாண்டி, திருவாரூர் மாவட்ட தலைவர் சவு.சு«ஷ், செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ப.க. செயலர் இரா.சிவக்குமார், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன், செயலாளர் ஏகாம்பரம், மாவட்ட அமைப்பாளர் தங்க கலிய பெருமாள், பருத்தியூர் சரவணன், பருத்தியூர் இராமலிங்கம், துரைசாமி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மலர் மாலை வைத்து மரி யாதை செலுத்தினர். அனைத்துக் கட்சித் தோழர்களும் மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner