எழுத்துரு அளவு Larger Font Smaller Fontதிருச்சி, மே.20 திருச்சி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இரா.மோகன்தாஸ் அவர்களின் தாயார் இரா.நல்லபொண்ணு (வயது 75) உடல்நலக்குறைவால் சிறீரங்கம் தெப்பக்குளம் முதல் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு  (19.5.2017) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தகவல் அறிந்ததும் பெரியார் கல்வி ஒருங்கிணைப்பாளர்  ஆர்.தங்காத்தாள், பெரியார் வீரவிளையாட்டு கழக  தலைவர் பேரா.ப.சுப்ரமணியன்,  மாவட்ட  கழகம் சார்பில் மாவட்ட தலைவர்  ச.கணேசன், மண்டல தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மண்டல செயலாளர் மு.நற்குணம்,  பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், சிறீரங்கம் நகர தலைவர் கண்ணன், செயலாளர் முருகன், இளைஞரணி தலைவர் தேவா, லால்குடி மாவட்ட மகளிரணி தலைவர் அரங்கநாயகி, திருச்சி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கிரேசி, அம்பிகா கணேசன், காட்டூர் சங்கிலிமுத்து, ராஜேந்திரன், லால்குடி மாவட்ட துணைத் தலைவர் அட்டலிங்கம், ப.ஆல்பர்ட், திருச்சி  மாநகர செயலாளர் சத்தியமூர்த்தி, மணிகண்டம் ஒன்றிய தலைவர் செபஸ்தியான், அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் மாவடியான், ப.க. தலைவர் பாலசுப்ரமணியம், ஸ்டாலின், லால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி, புள்ளம்பாடி முருகேசன், பன்னீர்செல்வம், சோமரசம்பேட்டை மகாமணி, லால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, பால்ராஜ்,  திருச்சி மாவட்ட ப.க தலைவர் மதிவாணன், மாநகர அமைப்பாளர் விடுதலைசெல்வம்,  ஜெயராஜ்,  வழக்குரைஞர் அரி, திருஞானசம்பந்தம்  உள்ளிட்ட நிருவாகிகள் மற்றும் கழகத் தோழர்கள்,  தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மறைந்த இரா.நல்லபொண்ணு உடல் இன்று (20.5.2017) பகல்
1 மணியளவில் ஓயாமரி மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.
மறைவு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner