எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஒன்றியம் சொக்கனாவூரை சேர்ந்த கழக ஒன்றிய துணை செயலாளர் சி.சந்திரசேகரன் அவர்கள் கடந்த 20.05.2017 அன்று இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவர்களின் இறுதி நிகழ்ச்சி 21.5.2017 ஆம் தேதியன்று நடைபெற்றது.

திராவிடர் கழகம் சார்பாக திரா விடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் பெ.வீரையன், தலைமை கழகப் பேச்சாளர்கள் அதிரடி அன்பழகன், இராம.அன்பழகன், திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் ஆர். இளங்கோவன், மாவட்ட அவை தலைவர் வி.கோவிந்தராஜ், கழக மாவட்ட துணைத் தலைவர் அரு.நல்லதம்பி, ஒன்றிய கழக தலைவர் க.ஜோதி, ஒன்றிய செயலாளர் பெ.அண்ணாத்துரை, ஒன்றிய ப.க. தலைவர் என்.கே.ஆர்.நாராயணன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முத்து துரைராஜ், மாவட்ட ப.க.து.தலைவர் மா.சிவஞானம், மதுக்கூர் நகர செயலாளர் கவு.ராஜீ, மதுக்கூர் நகர அமைப்பாளர் எல். சுரேஷ், படப்பை கருணாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.ராஜ்குமார், பெருகவாழ்ந்தான் தோழர் கோவிந்தராஜ், நாராயணசாமி, குமார், மண்டலக்கோட்டை சரவணன், அத்திவெட்டி ஆடலரசு, சிரமேல்குடி ராதா கிருஷ்ணன், சத்யம், சிலம்பவேளாண்காடு பாரி, சொக்கனாவூர் சிவாஜி, தி.மு.க ஆர்.மகாலிங்கம், ஆலத்தூர் தி.மு.க அ.மு.ரூஸ் வெல்டு, மாரிபன்னீர்செல்வம், முத்து.வீரையன், மதுக்கூர் பசீர் அகமது, சிவசேனா மாநில து.தலைவர் புலவஞ்சி போஸ், சி.பி.அய்.ஒன்றிய செயலாளர் பாரதி மோகன், அ.தி.மு.க வி.பிச்சை, மருத்துவர் செல்வராஜ், சொக்கனாவூர் சிவாஜி, சொக்கனாவூர் மு.ஊ.ம.தலைவர் தி.மு.க. கருப்பூர் தாண்டவம், குழந்தைசாமி, வாடியக்காடு ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். கழகக்கொடி அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சந்திரசேகரன் அவர்கள் துணைவியார் செந்தமிழ்செல்வி, மகள் வினோதா, மகன் பிரபாகரன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner