எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் (வயது 75) அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று (24.5.2017) இரவு சென்னையில் காலமானார் என்பது துயரமிக்க செய்தியாகும்.

மறைவுற்ற நா.காமராசன் அவர்கள் கலைமாமணி விருது, சிறந்த பாட லாசிரியர் விருது, பாரதிதாசன் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார் - திராவிட இயக்கச் சிந்தனையாளரும் கூட.

1964ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக  இருந்த போது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.

அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு கழகத் தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-  கி. வீரமணி

சென்னை                                                                                            தலைவர்
25-5-2017                                                                                       திராவிடர் கழகம்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner