எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை வையாபுரி (வயது 80) 24.5.2017 அன்று மாலை 5 மணியளவில் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம்.

25.5.2017 அன்று காலை 11 மணி யளவில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், மாவட்டச் செயலாளர் அ.அருண கிரி, மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன், மண்டலச்செயலாளர் மு.அய்யனார், தஞ்சை மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநகர தலைவர் நரேந்திரன், ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், துணைச் செயலாளர் மாதவராசன், உரத்தநாடு ஒன்றிய தலைவர் அ.லெட்சுமணன், மாவட்ட ப.க. செயலாளர் கோபு.பழனிவேல், தலைமை கழக பேச்சாளர் பூவை.புலிகேசி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் விஜயகுமார், திருவையாறு விவேக விரும்பி, தஞ்சை மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் கவிஞர் சித்தார்த்தன், கரந்தை டேவிட், நகர இளைஞரணி தலைவர் அ.பெரியார்செல்வம், நகர அமைப்பாளர் ரவிக்குமார், தலைமைக்கழக பேச்சாளர் அதிரடி அன்பழகன், பெரியார் பெருந்தொண்டர் தண்டாயுதபாணி, க.அரங்கசாமி, மாநில ப.க.பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர். வையாபுரி அவர்களின் உடல் எவ்வித் மூட சடங்குமின்றி மாலை 5 மணியளவில் எரியூட்டப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner