எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அருமை நண்பர் - சுயமரி யாதை வீரர் சேகர் பதிப்பக உரிமையாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்  (வயது 84) அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

தந்தை பெரியாரைப்பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்ற கருத்தோடு நடமாடும் பிரச்சாரகராக விளங்கி வந்தவர் அவர். 'விடுதலை' 'உண்மை' இதழ்களுக் கெல்லாம் தானாக முன்வந்து சந்தாக்களைச் சேர்த்துக் கொடுக்கும் ஆக்கப்பூர்வமான மாமனிதர்.

கடந்தாண்டு குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் எங்களோடு நான்கு நாள்கள் தங்கி சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகளையும், வழங்கிய பான்மையர். வாரந் தவறாமல் சென்னை பெரியார் திடலில்  நடக்கும் பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தவறாதவர். வாய்ப்புக்கிட்டும் பொழுதெல்லாம் என்னைச் சந்தித்து இயக்கம்பற்றியும், கொள்கைப் பற்றியும் இனிமையாக உரையாடக் கூடிய அரும்பெரும் தொண்டறச் செம்மலை இழந்தோமே என்ற துயரம் எம்மைத் தாக்குகிறது.

கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும்,  ஆறுதலையும் அவர்தம் பிரிவால் வருந்தும் குடும்பத்தின ருக்கும், நீண்ட அவரின் நண்பர்கள் வட்டாரத்திற்கும்  தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.

- கி. வீரமணி
சென்னை                                                                                 தலைவர்

1-6-2017                                                                                 திராவிடர் கழகம்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா. வில்வநாதன்,  திராவிடன் நிதி  நிறுவன மேலாளர் த.க. நடராசன் ஆகியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.  குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னார்  கழகத் தலைவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner