கல்லக்குறிச்சி கழக மாவட்டத்தின் மேனாள் மாவட்டத் தலைவர் அ.கூத்தன் அவர்களின் மாமியாரும், கல்லக்குறிச்சி கழக மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன் அவர்களின் தாயுமான பெரியம்மாள் அவர்கள் 1.6.2017 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். செய்தியறிந்து மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், கல்லக்குறிச்சி நகர தலைவர் ச.சுந்தரராசன், மாவட்ட இலக்கிய அணித் தலைவர் பெ.சயராமன், மாவட்ட துணை செயலாளர் குழ.செல்வராசு மற்றும் கழகத் தோழர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அவரது பிரிவால் வாடும் மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன் அவர் கட்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்கள்.