எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திண்டுக்கல் நகர திராவிடர் கழக தலைவர் மா.எழில் சுந்தர் (வயது 64) அவர்கள் 6.6.2017 அன்று இரவு 9 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

கழகம் சார்பில் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்ளக் கூடியவர். கடந்த 21.5.2017 அன்று திண்டுக்கல் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மா.எழில் சுந்தர் அவர்களின் இல்லம் சென்று உடல் நலம் குறித்து விசாரித்து வந்தார்.

மறைவு செய்தியறிந்து மண்டலத் தலைவர் இரா.வீரபாண்டியன், ப.க.மாவட்ட செயலாளர் மு.நாகராசன், மாவட்ட அமைப்பாளர் த.கருணாநிதி, நகரச் செயலாளர் அ.மாணிக்கம் மற்றும் கழகத் தோழர்கள் சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner