எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திண்டுக்கல் நகர திராவிடர் கழகத் தலைவர் மா.எழில் சுந்தர் (வயது 64) அவர்கள் 6.6.2017 அன்று இரவு 9 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மறைவு செய்தியறிந்து மண்டல தலைவர் இரா.வீரபாண்டியன், ப.க. மாவட்ட செயலாளர் மு.நாகராசன், மாவட்ட அமைப்பாளர் த.கருணாநிதி, நகரச் செயலாளர் அ.மாணிக்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

மாலை 4 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக சென்று திண்டுக்கல் மின் மயானத்தில் எவ்வித மூடசடங்குகளுமின்றி உடல் எரியூட்டப்பட்டது. மின் மயான அரங்கில் பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மண்டலத் தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்ட அமைப்பாளர் த.கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் பழ.இராசேந்திரன், நகரச்செயராளர் அ.மாணிக்கம், மாவட்ட ப.க.தலைவர் தி.க.பாலு, செயலாளர் மு.நாகராசன், திராவிடர் தொழி லாளர் கழக பேரணி தலைவர் அ.மோகன், பொதுக்கு உறுப்பினர் போ.செல்வராசு, வி.ராமசாமி, வி.கணேசன், கே.ஜி.எஸ்.ஜீவானந்தம், ச.பொன்ராஜ், செபாஸ்டின் சின்னப்பன், இரா.பொன்ராசன், கா.நாகேந்திரன், அ.ஜெயப்பிரகாஷ், எஸ்.பி.பெரியசாமி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில அமைப்பாளர் சூ.ச.மனோகரன், தலித் சிறுபான்மை மற்றும் இடதுசாரிகள் சார்பில் வே.கணேசன், கிருஷ்ண மூர்த்தி, தமிழ்மன்னன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner