எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி, ஜூன் 27 பெரியார் பெருந்தொண்டர் மொழியன்பன் (எ) பொன்.இராமசாமி அவர்கள் மரண சாசனம் எழுதிவைத்தி ருந்தார். நேற்று (26.06.2017) அவர் இயற்கை யடைந்தததையொட்டி அன்னாரது குடும்பத்தினரும் இயக்கத் தோழர்களும் அவரது விருப்பப்படியே இறுதி நிகழ் வை எவ்விதமூடச்சடங்குகள் இன்றி நடத்தி வைத்து அவருக்கு இறுதி மரியாதை செய்தனர்.

ஆவடி மாவட்ட கழகத்தின் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த பொன்.மொழி யன்பன் (எ) இராமசாமி அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலை மறை வுற்றார். இவர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணி யாற்றியவர்.

இதையொட்டி கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், பிற்பகல் நேரில் சென்று அன்னாருக்கு வீர வணக்கம் செலுத்தியும், குடும்பத் தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

உறவினர்கள் சடங்கு செய்ய வேண்டுமென்று பிரச்சினை செய்வதாக அறிந்து, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு  இறுதிநிகழ்வு கொள்கைப்படிதான் நடைபெற வேண்டும் என்று தனது குடும்பத்தினருக்கு ஆணையிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்டக் கழகத்தின் சார்பில் உடனடியாக ஓர் இரங்கலுரை ஏற்பாடு செய் யப்பட்டது.  அதில் அம்பத்தூர் பகுதி கழகத்தலைவர் இராம லிங்கம், மாவட்டக் கழகத் துணைத்தலைவர் கி.ஏழுமலை, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இராமதுரை, பகுத் தறிவாளர் கழகச் செயலாளர் கொரட்டூர் பன்னீர்செல்வம், ஆவடி நகர இளைஞரணி கழகத் தலைவர் தமிழ்மணி, மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல், முன்னாள் கவுன்சிலர் தி.மு.க. க.மு.ஜான், ஆவடி நகர கழகச்செயலாளர் கோ.முருகன், உண்மை வாசகர் வட்டச் செயலாளர் கி.மு.திராவிடமணி, திருநின்றவூர் பகுதி செயலாளர் கீதா, மேனாள் தொழிற்சங்கத் தலைவர் திருநாவுக்கரசு, செந் துறை இராசேந்திரன், மாவட்ட மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கலுரை நிகழ்த்தினர், இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் பா.தென் னரசு ஒருங்கிணைத்தார்.

நிகழ்வில் மாவட்டசெயலாளர் சிவக்குமார், மேனாள் செயலாளர் குப்புராசு, தமிழ்சாக்ரட்டீசு, கலை யரசன், கொரட்டூர் இள வரசு, கலைமணி, மோகனப்பிரியா, க.வனிதா, இராணி, பட்டாபிராம் அன்பு, அறிவுமணி, திருநின்றவூர் தலைவர் ரகுபதி, பிரேம்குமார், அம்பத்தூர் செயலாளர் சரவணன், பழ.முத்துக்குமார், தென்னரசு, பழனி, ஆசிரியர் கமலக்கண்ணன், ஜெயந்தி, செங்குட்டுவன், திருமுல்லைவாயல் அருள்தாஸ், எலக்ட்ரான், தமிழ்ச்செல்வன், தேன்மொழி, தமிழன்பன், முத்தமிழ்மணி கலந்துகொண்டு தங்கள் இறுதிமரியாதையை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து திரு முல்லைவாயலில் உள்ள மின் மயானத்திற்கு அவரது உடல் வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அன் னாரது உடல் எவ்வித சடங்கு களும் இன்றி மின்தகனம் செய் யப்பட்டது. மகளிரும் உடன் வருகை தந்திருந்தனர். மொழி யன்பனின் இணையரும், ஆவடி மாவட்ட மகளிரணி செயலாளரு மான சிவசுந்தரியிடம் அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த கழகக்கொடி ஒப்படைக்கப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner