எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நமது இயக்கத்தில் ஆழ்ந்த கொள்கை பற்றாளராகவும், பகுத் தறிவாளர் கழக மாநிலச் செயலா ளராக தந்தை பெரியாரால் நிய மிக்கப்பட்டு பணியாற்றி 1973இல் மறைந்த கொள்கைத் தோழர் பேராசிரியர் சி.வெள்ளய்யன் அவர்களது வாழ்விணையர் பேராசிரியர் பொறியாளர் திருமதி. சுந்தரி வெள்ளய்யன் (பி.இ., எம்.பி.ஏ.,) (வயது 86) அவர்கள் அமெரிக்கா, சான்பிரான்சிஸ்கோ - சான் ஜோஸ் (ஷிணீஸீ யிஷீsமீ) நகரில் 1-7-2017 பகல் 2 மணியளவில் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

பேராசிரியர் திருமதி. சுந்தரி வெள்ளய்யன் அவர்கள், தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் முதல்வராக ஓராண்டு - துவக்க காலத்தில் பணிபுரிந்து, மீண்டும் தனது மாநில அரசுப் பணியாகிய அரசினர் பாலிடெக்னிக் முதல்வராக, சென்னை, கோவை முதலிய பல இடங்களில் சிறப்பாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அவருக்கு மூன்று மகள்கள், பொறியாளர் திருமதி. பார்வதி - நக்கீரன், டாக்டர். திருமதி. ராதா - முத்துக் குமார், டாக்டர் திருமதி. வி.மாதவி (யு.கே.யில் மருத்துவராக உள்ளார்).

நம்மைப் பொறுத்தவரை நமது இனிய நெருக்கமான குடும்ப நண்பர் திருமதி. சுந்தரி வெள்ளய்யன் அவர்கள். எங்களது குடும்பமும், அவரது குடும்பமும் வேறானதல்ல; திரு. வெள்ளய்யன் மறைவுற்ற பிறகு, நாங்கள் அந்தக் குடும் பத்தின் காப்பாளரைப் போல் இருந்து மாறாத பாசத்துடன் பழகியவர்கள். அப்பிள்ளைகளும் அதே போல் பாசத்துடன் பழகி வருபவர்கள்.

42 ஆண்டுகளுக்கு முன், நெருக்கடி நிலை (ணினீமீக்ஷீரீமீஸீநீஹ்) பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், நான் மிசா கைதியாக சிறையில் இருந்த போது, எனது வாழ்விணையர் திருமதி. மோகனா அவர்களிடம் தொடர்ந்து வந்து அன்புகாட்டி ஆறுதல் கூறிய ஒரே ஒருவர் திருமதி. சுந்தரி வெள்ளய்யன் அவர்களாவார்கள் என்பதை மிகுந்த நன்றியுணர்வுடன், மாறாத துயரத்துடன், வழியும் கண்ணீருடன் பதிவு செய்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு இனிய நண்பர் மட்டுமல்ல; உரிமை எடுத்துக் கொண்டு பழகும் கல்வி ஆலோசகரும் கூட, எந்த உதவியை யார் கேட்டாலும், தயங்காமல் முன்னோடியாகச் சென்று சாதிப்பதில் அவர் ஒரு தனிரகம்.

அவரது மூன்று மகள்களும், அவரது மருமகன்களும் அவரை இறுதி வரை பாசத்துடனும், பரிவுடனும் நடத்தி கடமையாற்றிய எடுத்துக் காட்டானவர்கள்.

நிறை வாழ்வு வாழ்ந்த அவர் எவ்வித மனக்குறைவுமின்றி மறைந்தார்.

கடந்த மே மாதத்தில் (2017) தமிழ்நாட்டிற்கு வந்து தனது சகோதரிகளிடமும், எங்கள் குடும்பத்தினரிடமும் பாசத்துடன் பழகி விடை பெற்றார்.

அதுதான் எங்கள் கடைசி சந்திப்பாக அமைந்து விட்டது! என்ன செய்வது - இயற்கையை நாம் இதில் இன்னமும் வெல்லமுடியவில்லை.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் - குறிப்பாக மகள்கள், மருமகன்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்.

அவரது இறுதி நிகழ்ச்சி - அடக்கம் 4.7.2017 சான் ஜோஸ் (ஷிணீஸீ யிஷீsமீ) நகரில் நடைபெறவிருக்கிறது.

தலைவர்,
பெரியார் கல்வி நிறுவனங்கள்
முகாம்: திருச்சி,  2.7.2017

(மருத்துவமனையில் இருந்த கடைசி இரண்டு நாள்களும் ஆசிரியர் குடும்பத்தினர் தொடர்ந்து தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறினர்.).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner