எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மயிலாப்பூர் திராவிடர் கழகத்தின் தூண்களில் ஒருவரும், இறுதிவரை கருஞ்சட்டை வீரராக, தந்தை பெரியாரின் தளராத பெருந்தொண்டராக - உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையிலும் இயக்கத் தொண்டாற்றிய தோழர் மானமிகு எம்.கே.காளத்தி அவர்கள் நேற்றிரவு (2.7.2017) மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

சில வாரங்களுக்கு முன்புகூட தோழர் காளத்தி அவர்கள் என்னை எதிர்பாராமல் சந்தித்தார். நலம் விசாரித்து, அவரது தொண்டினைப் பாராட்டி ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தவேண்டும் என்றுகூட நமது விருப்பத்தைத் தெரிவித்தேன்.
வழமையான அன்புடனும், பாசத்துடனும் அவர் விடைபெற்றார்.

இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்து திறம்பட செயல்பட்ட செயல் வீரர். இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்று மீண்ட கடமை வீரர்!

எப்போதும் நம்மிடம் தனித்த அன்பும், மரியாதையும் காட்டுபவர்.

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களை அழைத்து, தமது இல்லம் அருகே (வீரப்பெருமாள் கோவில் அருகில்) பல பொதுக்கூட்டங்களைச் சிறப்புடன் நடத்தி வரலாறு படைத்தவர்.

அவரது மறைவு என்பது அக்குடும்பத்து உறுப்பினர் களுக்கு மட்டுமல்ல, நம் இயக்கத்திற்கும் ஒரு மாபெரும் ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

அவருக்கு நமது வீர வணக்கம்!
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!சென்னை    தலைவர்,
3.7.2017    திராவிடர் கழகம்.

---------

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்
மயிலை எம்.கே.காளத்தி மறைவு

தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் எம்.கே.காளத்தி (வயது 89) அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று (2.7.2017) இரவு 10 மணியளவில் சென்னை மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற் றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மறைவுற்ற எம்.கே.காளத்தி அவர்களுக்கு திருமதி.கருணா என்ற இணையரும், கா.அசோகன் என்ற மகனும், கா.அமுதா ராமலிங்கம், கா.அன்பு ரமேஷ்குமார் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மறைவுற்ற எம்.கே.காளத்தி அவர்களின் இறுதி நிகழ்வு இன்று (3.7.2017) மாலை 4 மணியளவில் சென்னை மயிலாப்பூர் இடுகாட்டில் நடைபெற்றது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner