எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மானமிகு ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டுத் துயரம் அடைந்தோம். குடந்தையை யடுத்த திருநாகேசுவரம் ஊரைச் சேர்ந்த வீர.சந்தானம் அவர்கள் பெயருக்கேற்ற உண்மையான தன்மானக் கொள்கை வீரர்! பெரியாரியல் கொள்கைவாதி! இளமையில் வறுமையின் தொட்டிலில் தவழ்ந்தாலும், விடாமுயற்சியாலும், உழைப்பாலும் நாட்டின் புகழ்பெற்ற ஓவியத் திலகமாக மணம் வீசினார்.

அவர் ஓவியம் வெறும் சித்திரம் அல்ல. உன்னத இலட்சியத்தின் கரு வைச் சுமந்திருக்கும். மனித உரிமையின் வீரியம் அதற்குள் வாள்முனையாகக் குடிகொண்டு இருக்கும்.

ஓவியக் கலையில் மட்டுமல்ல; திரைப்படத் துறையிலும் தன் நடிப்பு ஆற்றலைப் பதித்தவர் அவர்!

இறுதிவரை தமிழ் ஈழப் போராளியாக வலம் வந்தவர். அவர் உடல்நலம் பாதிக் கப்பட்டுப் படுக்கையில் இருந்தார் என்ற செய்தியை அறிந்தபோது, ‘‘தங்களுக்குத் தேவையான மருந்துகள் என்னவென்று எழுதுங்கள், கழகம் பெற்றுத் தரும்'' என்று அவருக்கொரு கடிதம் எழுதி னேன்.

என்னைப் பார்க்கும்பொழுதும் சரி, நண்பர்களைச் சந்திக்கும்பொழுதும் சரி, அந்தக் கடிதம்பற்றி அனைவரிடமும் கூறி வந்தார். அந்தக் கடிதமே தன் உடல்நலனுக்கு சிறந்த மருந்து என்றும் குறிப்பிட்டார். தன் தலையணைக்குக்கீழ் அந்தக் கடிதத்தை எப்பொழுதும் வைத் துள்ளேன் என்பார்.

பாசமிகு நண்பர், கொள்கையாளர் தோழர் வீர.சந்தானம் அவர்களின் மறைவு அவர்தம் குடும்பத்தை மட்டும் சார்ந்த இழப்பு மட்டுல்ல; தமிழ்ச் சமு தாயத்தின் தன்மானத்தையும் சார்ந்தது.

அவர் பிரிவால் துயருறும் அனை வருக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
தோழர் வீர.சந்தானத்துக்கு வீர வணக்கம்!

சென்னை    தலைவர்
14.7.2017    திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner