எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர் முன்னாள் மாவட்ட கழக செயலாளர்  மறைந்த பெரியார் பெருந்தொண்டரணி உணவு விடுதி தஞ்சை இராஜகோபால் அவர்களின் மகன், தஞ்சை நகரமன்ற முன்னாள் தலைவர் தேன்மொழி அவர்களின் வாழ்விணையர்   தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணி தலைவர்

இரா.சரவணக்குமார், இரா.வீரக்குமார் ஆகியோரின் மாமனார்,  தஞ்சை நகர தி.மு.க முன்னாள் துணைச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான  இரா.ஜெயபால் (வயது70) அவர்கள் இன்று (25.07.2017) காலை உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் நாளை காலை 10 மணியளவில் (26.07.2017)இறுதி ஊர்வலம் நடைபெறும்.

அவருக்கு  ஹேமலதா,  அனுராதா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்   செய்தி அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஜெயபால் அவர்களின் வாழ்விணையர் தேன்மொழிஅவர்களிடம் தொலை பேசியில் ஆறுதல் கூறினார்கள். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை செயற்குழ உறுப்பினர் இரா.குணசேகரன் மாவட்டத் தலைவர் சி.அமர் சிங் மண்டல செயலாளர் மு.அய்யனார் பொதுக்குழு உறுப்பினர் வ.ஸ்டாலின்  மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்  மாநகர செயலாளர் சு.முருகேசன்  அமைப்பாளர் வே.இரவிக்குமார் மாவட்ட ப.க செயலாளர் கோபு.பழனிவேல்  கழக பேச்சாளர்கள் அதிரடி க.அன்பழகன் பூவை.புலிகேசி     மாவட்ட செயலாளர் அ.அருணகிரி  மாவட்ட பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் கவிஞர் துரை.சித்தார்த்தன் உத்தநாடு ஒன்றிய ப.க செயலாளர் ஆலெட்சுமணன்         த.ஜெகநாதன் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் பழக்கடை கணேசன் மண்டலத் தலைவர் வே.ஜெயராமன் மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார், கன்னுகுடி தண்டாயுதபாணி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி பொறுப்பாளர்களும் பொதுமக்களும்  இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner