எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு அவர்களின் வாழ்விணையர் அஞ்சம்மாள் (வயது 85) அவர்கள் இன்று (13.7.2017) விடியற்காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். இன்றைக்கு 67 ஆண்டுகளுக்கு முன் (1950) நடைபெற்ற இவர்களின் சுயமரியாதைத் திருமணத்தில் தாலி தவிர்க்கப்பட்டது.

கோ.தங்கராசு அவர்களின் கழகப் பணிகளுக்கு, பொதுத் தொண்டுக்குத் தோன்றாத் துணையாக இருந்தவர் அவரது வாழ்விணையர் ஆவார். கழகத் தோழர்களை அவர் உபசரிக்கும் பாங்கு மிகச் சிறப்பானது. அவர்களுக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உண்டு. சிறிது காலமாகவே உடல்நலம் பாதிக்கப் பட்டு இருந்தாலும், அவருக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் சிறப்பாக வழங்கப்பட்டு வந்தன. அவரது இழப்பு அக்குடும்பத்தில் பெருந்துயரத்தை ஏற் படுத்தி விட்டது.

ஆனாலும், 85 வயது நிறைந்த அம்மையார் சிறப்பான வாழ்வை வாழ்ந்து காட்டியிருக்கிறார். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொண்டு, முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர் களும், அவர்தம் பிள்ளைகளும், குடும் பத்தினரும், உற்றார் உறவினர்களும், கழகத் தோழர்களும் ஆறுதல் பெறு வார்களாக! அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறோம்.

கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று வீர வணக்கம் செலுத்துவார்கள்.

சென்னை    தலைவர்
13.7.2017    திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner