எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருச்சி மாவட்ட கழக முன்னாள் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான  திருவெறும்பூர் மு.சேகர் அவர்களின் துணைவி யார்  ஜானகி அம்மாள் (வயது 55) நேற்றிரவு (9.8.2017) திடீர் மாரடைப்பால்   மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் 9.8.2017 அன்று இரவு தொலைபேசியில் இரங்கல் தெரிவித்து சேகருக்கு ஆறுதல் கூறினார்.

மறைந்த ஜானகி அம்மாள் உடலுக்கு மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மண்டல தலைவர் மு. நற்குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட்  உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.

ஜானகி அம்மாள்  இறுதி ஊர்வலம் இன்று (10.8.2017) மதியம் திருவெறும்பூர் நவல்பட்டு சாலை, நேதாஜி நகரிலுள்ள  அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இறுதி நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

தொடர்புக்கு: 9865618754

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner