எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி, ஆக.10  “பெரியாரின் கொள்கைகளை இப்பகுதியில் மிகச்சிறப்பாக வளர்த்தெடுத்த வர் சுயமரியாதைச் சுடரொளி யாகிவிட்ட இராஜேந்திரன்’’ என்று இராஜேந்திரனின் நினை வேந்தல் நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் குறிப்பிட்டார்.

ஆவடியில் நேதாஜி தெரு வில் வாழ்ந்த ராஜேந்திரன் பகுத் தறிவாளர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பெற்ற பிள்ளைகளைக் காட்டி லும் இவர் வளர்த்த பிள்ளைகள் ஏராளம். சொல்லும் செயலும் ஒன்றென வாழ்ந்தவர். அப்படிப் பட்ட சிறப்புக்குரிய இராஜேந் திரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 16.-07.-2017 அன்று அன்னாரது இல்லத்தில் நடை பெற்றது.

முன்னதாக பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் இராஜேந்தி ரனின் படத்தைத் திறந்து வைத் தார். ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமையேற்று நிகழ்வை ஒழுங்கு செய்தார். ஆவடி நகர செயலாளர் கோ.முருகன், மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தலைவர் ராம துரை, மாவட்டச் செயலளர் செ.சிவக்குமார், அமைப்பாளர் உடுமலை வடிவேல், உண்மை வாசகர் வட்டத்தின் தலைவர் செந்துறை சா. இராசேந்திரன், செயலாளர் கி.மு.திராவிடமணி,  தி.மு.க. தலைமைக் கழக சொற் பொழிவாளர் க.மு.ஜான், மண் டல செயலாளர் வி. பன்னீர் செல்வம், ம.தி.மு.க. அந்திரி தாஸ், குடும்ப உறவினர் பூவிருந் தவல்லி உதயகுமார், அண்ணா மலை, மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, திராவிடர்கழக மாநில மாண வரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உரையாற் றினர்.

பொதுச்செயலாளர் தனது இரங்கலுரையில், “ஒரு தெரு வுக்கு ஒரு பெரியார் பற்றாளர் இருந்தாலே போதும். பலரும் சிந்தனையில், வாழ்க்கையில் உயரமுடியும். அதற்கு இராஜேந் திரன் அவர்களே மிகச்சிறந்த உதாரணம். அந்தளவுக்கு அவர் பெரியாரின் கொள்கைகளை இந்தப்பகுதியில் வளர்த்தெடுத்தி ருக்கிறார். ஆவடி பகுதியில் பெரியார் மாளிகை உருவாக மிகப்பெரிய அளவில் பங்காற்றியிருக்கிறார். அவரது குடும்பங் களில் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களைச் செய்து வைத் திருக்கிறார். ஆகவே, அவர் விட்டுச்சென்ற பணிகளை இந்தக் குடும்பத்தின் துணை யோடு நாம் செயலாற்ற வேண் டும்’’ என்று குறிப்பிட்டார்.

இறுதியில் பேராசிரியரும் முனைவருமான அகிலன் அவர்கள் நன்றியுரை கூறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சிக்கு திருவள்ளுர் மாவட்டத் தோழர் ஸ்டாலின், தமிழ்சாக்ரட்டீஸ், ஏழுமலை, இராமலிங்கம், சரவணன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் அருண், மோகன பிரியா, கார்வேந்தன், கலை யரசன், கலைமணி, பாக்யா, மணிமேகலை, கனிமொழி, ராணி, ரகுபதி, ஜெயந்தி, வஜ்ரவேலு, திருநாவுக்கரசு, மற்றும் உற்றார் உறவினர்களும், நண்பர் களுமாய் ஏராளமானோர் வருகை தந்து மறைந்த பெரியார் தொண்டர் இராஜேந்திரனின் சிந்தனைகளை ஏந்தியவண்ணம் சென்றனர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner