எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீடாமங்கலம், ஆக.13 நீடாமங்கலம் புள்ளவராயன்குடிக்காடு திராவிடர் கழக கிளைக்கழகத் தலைவர், தமிழ்நாடு கல்வித்துறை கடைநிலை ஊழியர் சங்க மாநில முன்னாள் தலைவர் கோ.சுப்பையன் அவர்கள் 7.8.2017 அன்று மாலை இயற்கை எய்தினார். அவரின் இறுதி ஊர்வலமும் மற்றும் படத்திறப்பும் 8..8.2017 அன்று மாலை 4 மணியளவில் அவரது இல்லத்தில்நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

படத்தினை திறந்து வைத்து நினைவுரை ஆற்றினார்.  தஞ்சை வழக்குரைஞர் இராமமூர்த்தி, திருவாரூர் மாவட்டத் தலைவர் இரா.கோபால், அதிமுக ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.சங்கர், புலவர் வெங்கடாசலம், நண்பன், நீடாமங்கலம் நகரத் தலைவர், பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ், தலைமை ஆசிரியர் என்.அருணாசலம், ப.க. மாவட்டத் தலைவர் த.வீரமணி, காங்கிரஸ் தோழர் இரா.செல்லத்துரை, கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், ப.க.பொதுச் செயலாளர் அழகிரிசாமி, மாநில கலைத்துரை செயலாளர் ச.சித்தார்த்தன், மன்னை ஊமத்துரை ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர்.

இறுதி ஊர்வலத்தில் கழக வழக்குரைஞர் சிங்காரவேலு, ரெத்தினவேலு, ஒன்றிய செயலாளர் நா.இரவிச்சந்திரன், சரவணன், சேகர், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.இரமேசு, வடுவூர் உலகநாதன், சூசையொளி, கலியமூர்த்தி மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner