எழுத்துரு அளவு Larger Font Smaller Font

|

சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக ஆட்சியாளர் உயர்திரு இரா. முத்துக் குமாரசாமி அவர்கள் இன்று (ஆக.15) விடியற்காலை ஒரு மணி அளவில் சென்னையில் மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

தமிழ் உணர்வும், இனவுணர்வும் மிக்கவர், நம்மிடத்தில் பாசமும், பற்றும், மதிப்பும் கொண்டவர். சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்ட வெள்ளுடைவேந்தர்

பி. தியாகராயர் நூலை (ஆசிரியர் மயிலாடுதுறை குமாரசாமி) கழகத்தின் சார்பில் வெளியிட மனமுவந்து அனுமதியளித்தார்.
கழக விழாவில் பாராட்டுத் தெரிவித்து சிறப்பிக்கவும் பட்டவர்.

சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், பதிப்புத் துறையில் சாதனை மிக்க ஒரு நிறுவனம். அதனைத் திறன்பட நடத்தியதில் முத்துக் குமாரசாமி அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.

அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், நிறுவனத் தாருக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை     தலைவர்,

15.8.2017                                                      திராவிடர் கழகம்  

குறிப்பு: மறைவுற்ற முத்துக்குமாரசாமி மறைவு தகவல் கிடைத்ததும் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடனிருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner