எழுத்துரு அளவு Larger Font Smaller Font


செய்யாறு, ஜூன் 29 முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா. அருணாசலம் (வயது 91) அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (28.8.2017) விடியற்காலை மறைவுற்றார்.

மறைவு தகவல் அறிந்ததும் கழகத் தோழர்கள், நிர்வாகிகள், பல்வேறு அர சியல், கட்சியை சேர்ந்தவர்கள், பொது மக்கள் பெருந்திரளாக நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத் தினர். அய்யா பா. அருணாசலம் அவர் களின் மறைவு தகவல் கிடைத்தவுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உடனே தஞ்சை யில் இருந்து இரங்கல் அறிக்கை கொடுத்தார்.

பின்னர் இன்று (29.8.2017) காலை செய்யாறு நகருக்கு தனது இணையர் திருமதி மோகனா அம்மையாருடன் சென்று மறைவுற்ற பா. அருணாசலம் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து அவரது மூத்த மகன் அ. காமராஜ், இளைய மகன் செய்யாறு மாவட்டத் தலைவர் அ. இளங்கோ மற்றும்  மகள்கள், குடும்பத்தார் அனைவருக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து இறுதி நிகழ்வில் தமிழர் தலைவர் பங்கேற்று இரங்கல் கூட்டத்தில் நினைவேந்தல் உரையாற் றினார். முன்னதாக நேற்று (28.8.2017) மாலை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்  செய்யாறு நகருக்கு சென்று பா. அருணாசலம் அவர்களின் உட லுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். உடன் சி. வெற்றிச் செல்வி, வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், மாவட்டத் துணைச் செயலாளர் செம்பியம் கி. இராலிங்கம், விடுதலை தலைமைச் செய்தியாளர் வே. சிறீதர், பெரியார் திடல் கலைமணிஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

இன்று (29.8.2017) காலை நடை பெற்ற பா. அருணாசலம் அவர்களின் இறுதி நிகழ்வில் தமிழர் தலைவருடன் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயகுமார், கழக தலைமைச் செயற் குழு உறுப்பினர் உரத்தநாடு இரா. குண சேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், காஞ்சிபுரம் மாவட் டத் தலைவர் அசோகன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு. தாஸ், வேலூர் மண்டலத் தலைவர் சடகோ பன், பொறியாளர் வேல். சோ. நெடு மாறன் அரக்கோணம் மாவட்டத் தலை வர் லோகநாதன் செய்யாறு மாவட்ட செயலாளர் சேத்பட் நாகராஜ், செய்யாறு நகரத் தலைவர் தி. காமராஜ் திருவண் ணாமலை மாவட்டத் தலைவர் வேட்டவலம் பட்டாபிராமன், வட மணப் பாக்கம் வி. வெங்கட்ராமன், பேராசிரி யர் மு. தமிழ்மொழி, வி. தேவகுமார், கஜபதி, குணாளன், தயாநிதி, எல்.அய்.சி. பாண்டியன் மற்றும் திரளா னோர் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner