எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் கே.ஆர்.குமார் அவர்களின் தந்தையாரும், பொதுக் குழு உறுப்பினருமான அ.தீர்த்தகிரி அவர்களின் மாமாவுமான இராமன் (வயது 80) அவர்கள் பென்னாகரம் அருகே உள்ள சின்னகான அள்ளி பண்ணை இல்லத்தில் 7.9.2017 அன்று காலை 5 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

மறைவு தகவல் அறிந்தவுடன் மாவட்ட திராவிடர் கழக தலை வர் வீ.சிவாஜி தலைமையில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன், மாநில ப.க. செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் க.கதிர், மண்டல செயலாளர் கரு. பாலன், மாவட்ட அமைப்பாளர் இ.மாதன், தருமபுரி நகர தலைவர் மு.பரமசிவம், பென்னாகரம் ஒன்றிய தலைவர் அழகேசன், ஒன்றிய செயலாளர் சங்கரன், அமைப்பாளர் கோவிந்தராஜ், வழக்குரைஞர் தீ.சோழவேந்தன், பகுத்தறிவாளர் முனி.ஆறுமுகம், மற்றும் விடுதி காப்பாளர்கள் ஆகியோர் மறைந்தவரின் உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர். மூடச் சடங்கு ஏதுமின்றி எளிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner