எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கழகத் தோழர் திருவொற்றியூர் தி.செ.கணேசன் மாமியாரும், வட சென்னை  மகளிர் பாசறை அமைப் பாளர் க.சுமதியின் தாயாருமாகிய ஜெ.ராஜேசுவரி (வயது78) அம்மை யார் 17.9.2017 அன்று பகல் 12.30 மணியளவில் உடல் நலக்குறை வால் சென்னை ராஜீவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலமா னார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.

அவரது துணைவர் பெயர் கே.என்.ஜெகதீசன், இருமகள்களும், இரு மகன்களும் உள்ளனர்.

திருவொற்றியூர் டி.எம்.சண்முகனார் - தமது தந்தையார் டி.வேணுகோபால் இல்லங்களில் பிரச்சாரப் பணிகள் முன்னிட்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தங்கும்போது, அவரது அன்பினைப் பெற்றவர் ஜெ.ராஜேசுவரி ஆவார். இளமைக்காலம் முதலே இயக்க ஈடுபாட்டோடு வளர்ந்தவராவார்.

பெரம்பூர் நெல் வயல் சாலை, செய்யூர் பார்த்தசாரதி தெருவில் அமைந்த அவரது மகன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைச்செயலாளர்கள் கி.இராமலிங்கம், சி.பாசுகர், அமைப்பாளர் சி.இரகுபதி, மகளிரணிச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, பொன்.இரத்தினாவதி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர் பசும்பொன், மாநில கழக மாணவரணித் துணைச் செயலாளர் நா.பார்த்திபன், திருவொற்றியூர் தலைவர் பெரு.இளங்கோ, துணைத் தலைவர் பா.பாலு, பெரம்பூர் தலைவர் து.தியாகராசன், செயலாளர் மங்களபுரம் பாசுகர், செம்பியம் செயலாளர் டிஜி.அரசு, துணைத் தலைவர் பொறியாளர் ச.முகிலரசு, புதுவண்ணை  தலைவர் ஏ.மணிவண்ணன், ஆவடி நகர இளைஞரணி செயலாளர் க.கலைமணி, இசைஇன்பன், பெரியார் புத்தக நிலையம் விமல், அருள், ராஜா, திருவொற்றியூர் சேகர், ஓட்டேரி தட்சிணாமூர்த்தி, பொழிலன், திலீபன், பெரம்பூர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த பாலு, டி.எம்.சண்முகனார் பேத்தி அஞ்சுகம், பேரன் கார்த்திக், கழக மகளிரணித் தோழியர்கள் தமிழரசி சேகர், இந்திராணி, ம.யுவராணி, பொறியாளர் சீர்த்தி, மங்களபுரம் சீலா, கிறிஸ்டோபர், மோனிசா, செல்வி முரளி, பூங்குழலி, கலைமதி, ஆதிலட்சுமி மற்றும் பல கழகத்தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். 18.9.2017 அன்று பகல் 12 மணியளவில் பெரம்பூர் இடுகாட்டில் அம்மையாரின் உடல் எரியூட்டப்பட்டது.

************

மறைவு

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் இரா.காளத்தி அவர்களின் தந்தை க.ராஜூ (வயது 70) அவர்கள் 17ஆம் தேதி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர். மறைவு செய்தி அறிந்து கரூர் மாவட்ட திரா விடர் கழக தோழர்கள் மறைந்த இராஜூ உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner