எழுத்துரு அளவு Larger Font Smaller Font


எரவாஞ்சேரி, செப்.20 நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் எரவாஞ்சேரி கிராமத் தில் வசித்து வந்த பெரியார் பெருந் தொண்டர் எம்.மாரியப்பன் (வயது 93) செப்டம்பர் 18 அன்று இரவு 11 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.

தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு தமது வாழ்நாள் இறுதிவரை சுயமரியாதைக் காரராக வாழ்ந்து மறைந்தவர். கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற் றுள்ளார். சிறையும் சென்றுள்ளார்.

நமது கழக மாநாடுகளில் பாடைக்கட்டி தூக்கி வந்து மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்த்துவதுண்டு. அதுபோன்ற நிகழ்வுகளில் அந்த பாடையில் நீண்ட நெடுந்தாடிகொண்ட கருப்புச்சட்டையுடன் மாரியப்பனார் சிரித்துக்கொண்டே படுத்திருப்பார்.  இறுதியாக செப்டம்பர் 17 தந்தை பெரியார் 139ஆவது ஆண்டு பிறந்தநாளின்போது எரவாஞ்சேரியில் உள்ள கல்வெட்டில், (கட்டிலில் படுத்தப்படுக்கையாக இருந்த நிலை யிலும் கழகத் தோழர்களின் உதவியோடு) தூக்கி வந்து அமர்ந்தபடி, தமது கரத்தால் கழகக் கொடியினை ஏற்றிவைத்தார். அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சியாகும்.

அவர் ஏற்கெனவே தமது இறுதிநிகழ்வு எவ்வித மூடச்சடங்குமின்றி நடைபெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டபடி (குளிப்பாட்டுதல், தலையில் எண்ணெய் வைத்தல், விளக்கேற்றுதல், விபூதி வைத்தல்) போன்ற மூடநம்பிக்கைகள் இல்லாமல் செப்டம்பர் 19 அன்று மாலை 5 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு அருகில் உள்ள இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.நெப்போலியன், மாவட்ட செயலாளர் செ.புபேஷ்குப்தா, ஒன்றியத் தலைவர் ரெ.துரை சாமி, ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இணைச் செயலாளர் இராமலிங்கம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தங்கராசு, மாவட்ட துணைச் செயலாளர் பாவா.ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.பேபி, ஒன்றிய துணைத் தலைவர் அரங்கராஜ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ம.முத்துராசா, தெ.வேணுகோபால், இராமசாமி, ஜெ.தமிழரசன், திமுக ஒன்றியச் செயலாளர் ப.கோவிந்தராஜ் மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.   அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர் மகன் மா.மணி மற்றும் பெயரன் ம.மோகன் உள்ளிட்டவர்கள் கழகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner