எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி என்பது இயக்க வரலாற்றிலும் தந்தை பெரியார் வாழ்விலும் மறக்க இயலாத முக்கியமான ஊர்.

தந்தை பெரியாருக்குப் பெரும் எதிர்ப்பு காட்டி, கூட் டத்தில் கற்களை வீசி, தந்தை பெரியார் கை ஒடிந்த நிலைக்குப் பிறகும் அய்யாவின் அசராத பிரச்சாரம், அவ்வூரையே அவ ரது இயக்கப் பாசறையாக மாற்றியது!

அவ்வூரில் எண்ணற்ற ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர்கள் சிறை புகுந்து பெருமையடைந்தனர்!

பிரபல வணிகரான அய்யா மானமிகு போளி அவர்கள், தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டர்; இயக்கப் பொறுப் பாளர்; அவருக்குப் பிறகும்  அவரது குடும்பம், குறிப்பாக அவரது மகன் மானமிகு செல்வராஜ் அவர்கள் கழகப் பணியில் தந்தையை மிஞ்சும் ஆர்வலரானார்! தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் மற்றும் நம் மிடமும் மிகுந்த அன்பு, பாசம், மரியாதை மிகக் கொண்டவர்.

கட்டுப்பாடு மிகுந்த கருஞ்சட்டைக் கடமை வீரர்! அவர் தனது 78ஆம்  வயதில் நேற்றிரவு (செப்.29) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், துன்பமும், துயரமும் அடைந்தோம்.

அவருடைய இழப்பு அக்குடும்பத்திற்கு மட்டுமல்ல இயக்கத்திற்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும்!

அவருக்கு நமது வீர வணக்கம்.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கொள்கைக் குடும்பத்தின ருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் உரித்தாகுக!

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner