எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எழும்பூர் நீதிமன்ற வழக்குரை ஞர் ஆர்.இரத்தினக்குமார் அவர்களின் தாயார் ஆர்.ஜெயலெட்சுமி (வயது 75) உடல் நலக்குறைவினால் நேற்று (11.10.2017) மாலை மறைவுற்றார். தகவலறிந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் பெரியார் திடல் மேலாளர் ப.சீதா ராமன் மற்றும் கழகத் தோழர்கள் சென்றனர். மறைந்த ஆர்.ஜெய லெட்சுமி அம்மையாருக்கு உமாமகேஸ்வரி, செந்தில்வடிவு ஆகிய இரண்டு மகள்களும், இரத்தினக்குமார் என்று ஒரு மகனும் உள்ளனர். அம்மையாரின் இறுதி நிகழ்வு இன்று (12.10.2017) காலை நடைபெற்றது.

- - - - -



ரிஷிவந்தியம் ஒன்றிய திராவிடர் கழகத் தின் தலைவர் பொன்.சீனிவாசன் அவர்கள் 11.10.2017 அன்று இயற்கை எய்தியமைக்கு வருந்துகிறோம். சீனிவாசன் அவர்கள் தீவிர கொள்கைப் பற்றாளர்; திராவிடர் கழக மாநாடு கள், போராட்டங்கள் ஆகியவைகளில் தவறா மல் கலந்து கொண்டவர். கழகக் குடும்பத்தவர் களிடம் மிக்க பற்று கொண்டவர். மாவட்டக் கழகத் தலைவர் சுப்பராயன் உட்பட கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner