எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர் கழக மாவட்ட அமைப் பாளர் பெரியார் பெருந்தொண்டர் ச.கி.செல்வநாதன் அவர்களின் இணை யர் செ.பாப்பம்மாள் (வயது 82) அவர்கள் உடல்நலக்குறைவால் 22.10.2017 அன்று மாலை இயற்கை எய்தினார்.

மறைந்த அம்மையார் பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும், உ.பி.யில் நடந்த பெரியார் மேளாவிலும் கலந்து கொண்ட வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மையார் அவர்களின் மறைவு செய்தி அறிந்ததும்  வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், பெரியார் மருத்துவர் அணி மரு. பழ.ஜெகன்பாபு, பொதுக்குழு உறுப்பினர் இரா.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் க.சிகாமணி, மாநகர ப.க. செயலாளர் அ.மொ.வீரமணி, நகர தலைவர் ச.கி.தாண்டவமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.கண்ணன், ஆற்காடு ஒன்றிய தலைவர் கோ.விநாயகம், மாவட்ட ப.க. தலைவர் வெ.தங்கராஜ், மாவட்ட ப.க. துணைத் தலைவர் ஆ.துரைசாமி, மாவட்ட ப.க. செயலாளர் இர.அன்பரசன், மாநகர செயலாளர் வே.பெ.குமார், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் க.அருள்மொழி, மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் ச.கலைமணி பழனியப்பன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மருத்துவர் அனிதாஜெகன், மகளிரணி க.சகுந்தலா இளங்கோவன், பொதுக் குழு உறுப்பினர் தா.நாகம்மாள், மகளிரணி வீ.பொன்மொழி, மகளிரணி க.கனகம்மாள், மகளிரணி சி.லதா, மகளிரணி ச.கலை வாணி ஆகியோர் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

பொதுக்குழு உறுப்பினர் இரா.கணேசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அம்மையாரின் சகோதரர் அ.அபிமன்னன், மாவட்ட ப.க. செயலாளர் இர.அன்பரசன், வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார் ஆகியோர் அம்மையாரின் சிறப்பினை எடுத்துரைத்தனர். பின்னர் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 5 மணியளவில் சத்துவாச்சாரி பாலாற்றங்கரையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கு.அ.பெரியதம்பி மறைவு


விழுப்புரம் நகர கழக அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் கு.அ.பெரியதம்பி (வயது 96) உடல் நலக்குறைவால் 24.10.2017 அன்று காலை 6 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்ச்சி அன்று மாலை 5 மணிக்கு சடங்குகள் இன்றி நடைபெற்றது. இறுதி நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத் தலைவர்  ப.சுப்பராயன், விழுப்புரம் நகர செயலாளர், கொ.பூங்கான், திமுக நகர அவைத் தலைவர் இரா.சக்கரை, கலைஞர் பகுத்தறிவு பாசறை செயலாளர் பிரபா. தண்டபாணி, ஏ.சாமிக் கண்ணு (இ.எஸ்.கல்விக்குழுமம்), கழகத் தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள், அனைத்துக்கட்சி தோழர் கள் பங்கு கொண்டனர். பிறகு நடைபெற்ற இரங்கல்கூட்டத்தில் ப.சுப்பராயன், ஏ.சாமிக்கண்ணு உள்ளிட்டோர் இரங்கல் உரை ஆற்றினர். வீரவணக்கம் செலுத்தப்பட்டு இரண்டு நிமிடம் அமைதி காத்து இறுதி மரியாதை கடைப்பிடிக்கப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது.

திருச்சி என்.எம்.முருகேசன் மறைவு

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக, திருச்சி நகர திராவிடர் கழகத்தின் செயலாளராக பணியாற்றிய ஜங்சன் என்.எம்.முருகேசன் அவர்கள் உடல் நலக்குறைவால், கடந்த 20ஆம் தேதியன்று மறைவுற்றார். 21ஆம் தேதி நண்பகல், இராமசந்திர நகரில் அவர் இல்லத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேரு அவர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார். இயக்கத்தின் சார்பாக, மாநில அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் இரா.திராவிடன் கார்த்திக், திருச்சி மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் ஆ.விடுதலை செல்வம், துணைச் செயலாளர் மணவை இராஜா, பூங்குடி தொழிற்சங்க அமைப்பாளர் நா.வெற்றிச் செல்வன், திருச்சி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் க.ஆ.நேதாஜி உள் ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு மறைந்த பெரியார் பெருந் தொண்டர் முருகேசன் மகன் திராவிடன் உள்ளிட்ட குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner