எழுத்துரு அளவு Larger Font Smaller Fontபெரியார் பயிலக மேனாள் இயக்குநர் நினைவில் வாழும் பேராசிரியர் மு.நீ.சிவராசன் அவர் களின் வாழ்விணையர் திலகவதி அம்மையார் (வயது 76) அவர்கள் நேற்று மதியம் (29.10.2017) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவருக்கு இராசேந்திரன், ஆறுமுகம், பாண்டியன் ஆகிய மூன்று மகன்களும்,  மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.அம்மையாரின் மறைவு செய்தியறிந்து திராவிடர் கழகப் பொதுச் செயலளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தோழர்கள் இர.சிவசாமி, பொழிசை கண்ணன், சு.மோகன்ராஜ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தி குடும்பத் தினருக்கு ஆறுதல் கூறினர். அவரது இறுதி ஊர்வலம் இன்று (30.10.2017) மதியம் குரோம்பேட்டையில் நடைபெற்றது. முகவரி: மு.நீ.சி.இராசேந்திரன், 44பி, நெமிலிச்சேரி நெடுஞ்சாலை, பாரதி புரம், குரோம்பேட்டை, சென்னை- 44.

 

கரூர் மண்மங்கலம் தளவாபாளையம் திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வாசுகி முருகேசன் அவர்களின் மாமனாரும், முரு கேசன் அவர்கள் தந்தையுமான அரிசிக்காரர் கே.ராமசாமி (வயது 84) மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு மாராயி என்ற துணைவியாரும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். மறைவுச் செய்தி அறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner