எழுத்துரு அளவு Larger Font Smaller Font


செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் - பெரியார் பெருந் தொண்டர் மானமிகு அ.கோ.கோபால்சாமி அவர்கள் நேற்று (2.11.2017) மாலை மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்து கிறோம். அவருக்கு வயது (91).

இரயில்வேயில் ஊழி யராகப் பணியாற்றி, உழைப் பால் உயர்ந்தவர். இரயில் வேயில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே கழகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர். தந்தை பெரியாரை அழைத்துப் பொதுக்கூட்டங்களை நடத்தியவர்.

பணி ஓய்வுக்குப்பின் இயக்கத்தில் முழுநேரமும் பணியாற் றினார். செங்கற்பட்டில் தந்தை பெரியார் சிலையைத் தம் சொந்த செலவில் நன்கொடையாக அளித்தவர்.

பெரியார் அறக்கட்டளைக்கு, பெரியார் படிப்பகம் அமைக்க நிலத்தையும், கட்டடத்தையும் உருவாக்கியவர். சுயமரியாதை இயக்க 80 ஆம் ஆண்டு விழாவை -  செங்கற்பட்டில் முதல் சுயமரி யாதை இயக்க மாநில மாநாடு (1929) நடைபெற்ற அதே இடத்தி லேயே மிக நேர்த்தியாக நடத்தியதில் முக்கிய பங்கு அவருக்குண்டு. செங்கற்பட்டு இரயில்வே நிலையத்தில் முதன்முதலாக தந்தை பெரியார் படத்தினைத் திறக்கச் செய்தவர்.

அவர் வாழ்விணையர் கவுசல்யா  ஆவார்கள். கடந்த 17 ஆம் தேதி அவரை நேரில் சந்தித்து, உடல்நலம் விசாரித்து வந்தேன். மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவ உதவிப் பெறுவதற்கான ஆலோசனையும் கூறிவந்தேன்.

இந்நிலையில், அவர் மறைவு மிகுந்த வேதனையை அளிக் கிறது.

அவரின் வாழ்விணையர் கவுசல்யா அம்மையார் அவர்களுக் கும், உற்றார், உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்து, அவரின் அளப்பரிய இயக்கத் தொண்டுக்கு வீர வணக்கத்தை செலுத்துகிறோம்.
கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர்

இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

கி.வீரமணி
சென்னை                                                          தலைவர்
3.11.2017                                                  திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner