எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மூத்த பத்திரிகையா ளரும், சென்னை பத் திரிகையாளர் சங்கத் தின் (எம்.யூ.ஜே.) பொதுச்செயலாளரு மான இரா.மோகன் (வயது 54) அவர்கள் நேற்று (5.11.2017) காலை 10.30 மணியளவில் திருவல்லிக்கேணியில் உள்ள அவரது இல்லத் தில் மாரடைப்பால் மறைவுற்றார் என்ற தகவலை அறிந்து வருந்துகிறோம்.

‘தினகரன்' நாளிதழில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி வந்த அவர், பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், பத்திரிகையாளர்கள் நலனுக் காகவும் அயராது பாடுபட்டவர். அவரது இழப்பு பத்திரிகை துறைக்கே பேரிழப்பாகும்.

சென்னை பத்திரிகையாளர் சங்கக் கட்டடத்தில் ‘விடுதலை' ராதா உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் (24.9.2017), நான் உரை யாற்றும்போது, ஆண்டுக்கு ஒருமுறை உடற்சோதனை செய்துகொள்ளுங்கள் என்ற வேண்டுகோளை முன் வைத்தேன். தோழர் மோகன் அவர்களின் திடீர் மறைவிற்குப் பிறகாவது பத்திரிகையாளர்களான நம் தோழர்கள் எமது வேண்டுகோளைச் செவிமடுத்துச் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நண்பர் மோகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறேன்.


ஆசிரியர், ‘விடுதலை'
சென்னை                                                                                                         தலைவர்
6.11.2017                                                                                                   திராவிடர் கழகம்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner