எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* விமுப்புரம் மாவட்டம் சென்ன குனம் பெரியார் பெருந்தொண்டர் மு.இராமானுஜம்  (வயது 92) அவர்கள் 16.11.2017 மாலை 6.30 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம்.  அவர்களுக்கு வாழ்விணையர் கமலம், மூன்று மகள்கள் மல்லிகா, கலா, தமிழ் மணி, ஆகியோரும் ஒரு மகன் அன்பரசு, மருமகள் பிரேமா, மற்றும் மகன்வழி பிள்ளைகள் சிந்தனைதென்றல், சிந்தனைமாறன் ஆகியோர் உள்ளனர்,

தந்தைபெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் மீது மாறா பற்று கொண்ட பெரியார் பெருந்தொண்டர் மு.ராமானுஜம் தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று உள்ளார். பொதுக்கூட்டம், மாநாடுகள், கிராமப் பிரசாரங்கள் ஆகிய  அனைத்து  நிகழ்ச்சி களிலும் கலந்து கொண்டுள்ளார். தான் கொண்ட கொள்கைகள்மீது இறக்கும் தறுவாயிலும் கழகத்தின்பால் மாறாப் பற்றுகொண்ட கறுஞ்சட்டை போராளியாக திகழ்ந்தவர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சென்னகுணம் கிராமத்தில்

மு.இராமானுஜம் உடலுக்கு மாலை வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இறுதி மரியாதை செய்தார்.
விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், சென்னகுணம் இரா.சித்தார்த்தன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner