எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சுயமரியாதை இயக்கப் பாரம்பரியத்தில் வந்த நமது அருமைத் தோழர் ‘நக்கீரன்' பொறுப்பாசியர் கோவி.லெனின் அவர்களின் வாழ்விணையர் நமது அருமை சகோதரி மானமிகு பிரதீபா அவர்களின் திடீர் மரணம் (இன்று அதிகாலை) அதிர்ச்சியை அளிக்கக் கூடியது. பெரியார் திடலில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் குடும்பத் துடன் வரத் தவறாதவர்கள்.

நமது சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் குழு  (SMAG) அமைப்பில் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பதிவுகளை சிறப்பாகச் செய்யக் கூடியவர் - முற்போக்குச் சிந்தனையாளர்! எடுத்துக்காட்டான இணையராக வாழ்ந்து காட்டியவர்கள் லெனினும் - பிரதீபாவும்!

அவர்களின் ஒரே மகள் நமது அருமை மகள் தமிழ்நிலா (தொடர்ந்து பெரியார்  பிஞ்சு குழந்தைகள் பழகு முகாமில் பங் கேற்று வருபவர்) தோழர் கோவி.லெனின் ஆகி யோருக்கு ஆற்றொண்ணாத் துயரத்து டன் நமது இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறோம்.
ஆறுதல் பெறுவார்களாக!

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள: 044-43993000

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner