எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிதம்பரம் நகரில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு தோழர் புலவர் இராசாங்கம் அவர் கள் (வயது 93) சிதம்பரத்தில் நேற்று (27.11.2017) காலமானார் என்பதை அறிந்து வருத்தமும், துயரமும், மிகுதியும் அடை கிறோம்.

நாம் மாணவப் பருவத்தில் கழகப் பிரச்சாரம் செய்த காலத்திலேயே, அவர் நம்முடன் கலந்துகொண்டு பல பொதுக்கூட்டங்களில் பேசியவர்; பின்னாளில், சிதம்பரம் மாவட்டத் தலைவர் மானமிகு கு.கிருட்டிணசாமி அவர்கள் பணியாற்றிய காலத்தில் சிதம்பரம் நகர திராவிடர் கழகத் தலைவராக இருந்தவர். பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி முன் னாள் ஆசிரியர் அவர்.  கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவினால் வீட்டோடு தங்கி உடல்நலம் பேணி வந்தார்.

சில மாதங்களுக்குமுன் சிதம்பரத்திற்கு நாம் நேரில் சென்று நலம் விசாரித்தோம்.

இயக்கத்தின் மூத்த சுயமரியாதை வீரர்களின் இப்படிப்பட்ட மறைவு பெரும் வெற்றிடங்களை அவ்வப்போது உருவாக்கி வருகிறது. அவருக்கு நமது வீரவணக்கம்.

அவரது மறைவால் வாடும் அவரது வாழ்விணையர் பிச்சம்மாள், மகன்கள் அன்பரசன், பொய்யாமொழி (காட்டுமன்னார்குடி நகர திராவிடர் கழகத் தலைவர்) நச்சினார்க்கினியன், மகள் செல்வகுமாரி மற்றும் குடும்பத்தவருக்கு நமது ஆறுதலும், ஆழ்ந்த இரங் கலும் உரித்தாகுக!

கி.வீரமணி
சென்னை    தலைவர்

28.11.2017    திராவிடர் கழகம்.

குறிப்பு:  இன்று (28.11.2017) மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தலைமைக் கழகம் சார்பில் கலந்துகொள்வார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner