எழுத்துரு அளவு Larger Font Smaller Font


காங்கிரசு கட்சியில் நீண்ட நாள்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், சீரிய பண்பாளரும், நெய்வேலி டாக்டர் வெ.குழந்தைவேலு அவர்களின் சகலையுமான நண்பர் சிதம்பரம் வள்ளல் பெருமான் அவர்கள் நேற்று (27.11.2017) காலமானார் என்பதை அறிய மிகவும் வருத்தமும், துயரமும் அடைகிறோம்.
நண்பர் வள்ளல்பெருமான் அவர்களது அரு மைத் தந்தையார் திராவிடர் கழகத்தில் பொறுப்பு வகித்தவர் அந்நாளில். நம்மிடம் எப்போதும் மிகுந்த அன்பும், மரியாதையும் காட்டக்கூடியவர். வள்ளல்பெருமான் அவர்களது தந்தையார், நாம் சிதம்பரத்திற்கு கழகப் பணிகள் சம்பந்தமாக செல்லும்போதெல்லாம் தவறாமல் வந்து சந்தித்து நலம் விசாரித்து உரையாடிச் செல்வார். அதுபோலவே, அவரது தனயரும் நம்மிடம் கட்சி வேறுபாடு கருதாது - அன்புடன் பழகியவர்.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தவருக்கும், அவரது சகலை டாக்டர் வெ.குழந்தைவேலு, அவர்களின் குடும்பத்தவருக்கும், உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
சென்னை                                                                                            தலைவர்

28.11.2017                                                                                    திராவிடர் கழகம்.

குறிப்பு: கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் நம் சார்பில் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்துவர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காஞ்சி ஆர்.ஜானகிராமனுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்

காஞ்சியில் நீண்ட நாள் கழகத்தவராக இருந்த வரும், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தவரும், ‘மிசா' கைதியாக சிறை சென்று மீண்டவருமான தோழர் அரங்க.ஜானகிராமன் அவர்கள் (வயது 85) காலமானார் என்ற செய்தியை மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி.அசோகன் அவர்கள்மூலம் அறிந்து மிகவும் வருத்தமும், துயரமும் அடைகிறோம்.

கழகத்திலிருந்து வெளியேறி, வேறு ஒரு அணிக்கு அவர் சென்ற போதிலும், நாம் காஞ்சிக்கு நிகழ்ச்சி களுக்குச் செல்லும்போதெல்லாம் வந்து சந்திக்கத் தவறமாட்டார்.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

சென்னை                                                                                            தலைவர்
28.11.2017                                                                                    திராவிடர் கழகம்.

குறிப்பு: இறுதி நிகழ்வு இன்று (28.11.2017) மாலை 3 மணியளவில் நடைபெறும். முகவரி: 64டி சாலை தெரு, பெரிய காஞ்சிபுரம்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner