எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ. 29- தந்தை பெரியாரின் பேரன்பை பெற்ற நீதிக்கட்சி தலைவர்களில் ஒரு வரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் மகன் புகழ்பெற்ற கண் மருத்துவர் இ.டி.செல்வம் (வயது 93) அவர்கள் நேற்று (28.11.2017) காலை 6.30 மணி யளவில் சென்னை, கோபால புரத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை 5மணி அளவில் நேரில் சென்று மறைவுற்ற மருத்துவ பேராசிரியர் இ.டி. செல்வத்தின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்து அவரது குடும் பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலை வர் த.வீரசேகரன், வழக்குரை ஞர் ஆம்பூர் ஜெ.துரை, மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மண்டல மாணவரணி செயலா ளர் மணியம்மை, செஞ்சி கதி ரவன், தென் சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வ நாதன், தரமணி மஞ்சநாதன், மகேந்திரன், முரளி, பெரியார் திடல் சுரேஷ், கலைமணி, சிறீ ராம், பிரபு, பெரியார் மாணாக் கன் ஆகியோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

மறைவுற்ற மருத்துவ பேராசிரியர் இ.டி.செல்வம் அவர்களுக்கு செ.மார்ட்டின் செல்வம், ஏ.சி.செல்வம், டாக்டர் எஸ்.செல்வம் ஆகிய மகன்களும், அசந்தா பீட்டர், சீலா சென்ட்டியாகு  ஆகிய  மகள்களும் உள்ளனர்.

மறைவுற்ற மருத்துவர் இ.டி.செல்வம் அவர்கள் புகழ் பெற்ற கண் மருத்துவராகவும், அரசு கண் மருத்துவமனை கண்காணிப்பாளராகவும், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியராகவும், அப்பல்லோ மருத்துவமனையில் கண் மருத் துவ பிரிவில் துறைத் தலை வராகவும், ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது இறுதி நிகழ் வுகள் இன்று (29.11.2017) காலை 10 மணியளவில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் திரேசா தேவாலயத்தில் நடை பெற்று, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner