எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருத்தணியை அடுத்த அத்தி மாஞ்சேரிப்பேட்டை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மானமிகு பி.எஸ்.சக்ரபாணி அவர்கள் நூறு ஆண்டு கடந்து (26.12.1917-31.12.2017) நேற்று மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந் துகிறோம். அந்தப் பகுதியில் தனிமனிதராகவிருந்து தந்தை பெரியார் கொள்கையை வளர்த்த கருஞ்சட்டை ஆசிரியர் அவர். ஏராளமான மாணவர்களை, இளைஞர் களை உருவாக்கி இயக்கத்திற்குத் தந்தவர்; ஊர்ப் பொதுமக்களின் மதிப்பினை மிகப்பெரிய அளவில் பெற்றவர். பலமுறை அப்பகுதிக்கும் - ஆந்திர எல்லைக்கும் என்னையும், கழகத்தினரையும் அழைத்துப் பிரச்சாரம் செய்ய உதவியவர்.

ஒரு பெரியார்தொண்டர் எப்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கு இலக்கணமாகவே திகழ்ந்தவர்.

அவர் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல; கழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

குடும்பத் தலைவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத் தினருக்கும், தங்களின் வழிகாட்டியை இழந்த அந்தப் பகுதி கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுயமரியாதைச் சுடரொளியாகி விட்ட ஆசிரியர் சக்கர பாணி அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கம்!

- கி.வீரமணி,

சென்னை                                                    தலைவர்,
1.1.2018                                                திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner