எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மாணவர் பருவந் தொட்டு தந்தை பெரியார் கொள்கையின்பாலும், திராவிடர் இயக்கத்தின் பாலும் ஆர்வமுடன் பங்கு கொண்டு, லால்குடி பெரு வளப்பூர் கிராமத்தில் ஏரா ளமான இளைஞர் களைப் பகுத்தறிவுக் கொள்கையின் பால் ஈர்த்தவரான டாக்டர் பி.கே.தருமலிங்கம் அவர்கள் (வயது 84) இன்று (12.1.2018) சென்னையில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
சென்னை பொது மருத்துவமனையில் பால்வினை நோய்த் துறை தலைமை இயக்குநராக இருந்து அரும் பணியாற்றியவர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சங்கத் தலைவராக இருந்து வழிகாட்டியவர்.

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணி யம்மை மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவராகவும், ஆலோசகராகவும் இருந்த நமது அன்புக்கும், மரியாதைக்கும் உரியவர் ஆவார்.

இவரது அருமை மாமனார் பெருவளப்பூர் டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்களும், அவரது குடும்பத்தவர்களும் மிகச் சீரிய பெரியார் பெருந்தொண்டர்கள் ஆவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!

முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந் தாலும், பெரியார் திடலுக்கு வந்து நம்மையெல்லாம் இடை இடையே சந்தித்து உறவாடக் கூடிய இயக்க ஆர்வலர்.

அவருக்கு வாழ்விணையரும், மூன்று மகள்களும், ஒரு மகனும் (பொறியாளர் நியூட்டன்) உள்ளனர்.

அவர் மறைவு மிகவும் துயரத்திற்கு உரியது. அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
சென்னை                                                                                தலைவர்

12.1.2018                                                                           திராவிடர் கழகம்.

தொடர்புக்கு: கீ 41/4, முதல் தெரு, அண்ணாநகர், சென்னை-40, தொலைப்பேசி: 044-26213384தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner