எழுத்துரு அளவு Larger Font Smaller Font


லிபர்டி கிரியேஷன்ஸ் திரைப்பட நிறுவனம் தயாரித்த ‘பெரியார்’ படத் தினை தெலுங்கு மொழியில் மாற்றம் செய்து வெளியிட்ட பில்லேல்லி சுனில் (வயது 43) உடல் நலக் குறை வால் 22.1.2018 அன்று விஜயவாடாவில் காலமானார்.

‘பெரியார்’ தெலுங்கு படத்தினை தயாரித்து ஆந்திரா முழுவதும் அதனை வெற்றிகரமாக திரையிடச் செய்தவர் சுனில் ஆவார். திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட பின்பும், பெரியார் இயக்கத்தின் தொடர்பில் இருந்தவர். 'அம்பேத்கர்’ திரைப்படத்தினையும் தெலுங்கு மொழியில் வெளியிட்டவர். சுனில் அவர்களுக்கு மனைவி - கல்யாணி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

சுனில் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்ததும் லிபர்டி கிரியேஷன்ஸ் இயக்குநர் வீ.அன்புராஜ் தொலைப்பேசியில் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

சுனில் அவர்களின் துணைவியார் கல்யாணி பில்லேல்லி அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இரங்கல் தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner