எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் பெருந்தொண்டர் பெருவளப்பூர் இரா.சாமிநாதன் மறைவுக்கு வீரவணக்கம்!

தமிழர் தலைவர் இரங்கல்

லால்குடி ஒன்றியம் பெரியார் பெருந்தொண்டர் பெருவளப்பூர் இரா.சாமிநாதன் (வயது84) உடல் நலக்குறைவால்   நேற்றிரவு (25.1.2018) மறைந்தார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையாரைத் தொடர்ந்து நம்முடன் அளவற்ற அன்புடன் பழகிவந்தவர். கழகத்தில் மிகுந்த கட்டுப்பாடு காத்து, கழகம் அறிவித்த அனைத்து போராட் டங்களிலும் பங்கேற்றவர்.

தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு பெருவளப்பூர்  பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்க வைத்தவர். அதனாலேயே அப்பகுதி இவரது பெயரில் Ôசாமிநாதபுரம்Õ என்றே அழைக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக  ஊராட்சி  மன்ற தலைவராகப் பணியாற்றி வந்துள்ளார்.

லால்குடி இரா.சாமிநாதன் அவர்களின் மறைவு அவர் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் கழகத்துக்கும், சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும்.

அவர் மகன் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்

தெரிவித்துக்கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

கழகத்தின் சார்பில் மரியாதை

மாவட்ட தலைவர் தே.வால்டேர், மாவட்டச் செயலாளர் அங்கமுத்து, மண்டலச் செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட துணைத் தலைவர் அட்டலிங்கம், ஒன்றிய செயலாளர் பிச்சைமணி உள்ளிட்ட லால்குடி ஒன்றிய பொறுப்பாளர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பெருவளப்பூர் கிராமத்தில் அவர் உடல் அடக்கம் நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner