எழுத்துரு அளவு Larger Font Smaller Font


காஞ்சிபுரம், பிப். 11- காஞ்சிபுரம் சுயமரியாதைச் சுடரொளி டி.ஏ. கோபால்  அவர்களின் தம்பியும், மாவட்ட கழகத் தலைவர் டி.ஏ. ஜி.அசோகன் அவர்களின் சிறிய தந்தையாரும், இயக்கத்தோழர் டி.ஏ.ஜே. எழிலன் அவர்களின் தந்தையாரும், மாவட்ட மாண வரணி தலைவர் அ.அரவிந்தன் அவர்களின் பாட்டனாருமாகிய பெரியார் பெருந்தொண்டர் டி.ஏ. ஜோதி அவர்கள் இன்று (11.2.2018) காலை 7 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாருக்கு வயது 80.   காஞ்சிபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை தம் சொந்த பணத்தில் வாங்கித்தந்த சிறப்புக் குரியவர். அன்னாரின் கண்களை அகர்வால் மருத்துவமனைக்கு  கொடையாக அளிக்கப்பட்டது.

மறைந்த தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். உடன் மோகனா அம்மையார், பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், வெளி யுறவுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் இருந்தனர்.  அன்னா ரின் இறுதி நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு நடைபெறும்.

முகவரி: 43 லிங்கப்பன் தெரு, பெரிய காஞ்சிபுரம். அன்னாருக்கு கழகத்தின் சார்பில் வீரவணக்கத் தையும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவித்துக் கொள் கிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner